அரையிறுதி நாளை; பயிற்சியில் பங்கேற்கவில்லை யுவராஜ்

அரையிறுதி நாளை; பயிற்சியில் பங்கேற்கவில்லை யுவராஜ்

அரையிறுதி நாளை; பயிற்சியில் பங்கேற்கவில்லை யுவராஜ்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 5:48 pm

உலகக் கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள  இந்திய அணியின் சகல துறைவீரர் யுவராஜ் சிங் பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக வீரர்களுடன் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட போது கணுக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் குழாத்திலுள்ள ஏனைய 14 வீரர்களும் பயிற்சிகளில் பங்கேற்றதாக இந்திய அணியின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்