அத்தனகல ஓயாவில் மீன்கள் உயிரிழப்பு; ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

அத்தனகல ஓயாவில் மீன்கள் உயிரிழப்பு; ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

அத்தனகல ஓயாவில் மீன்கள் உயிரிழப்பு; ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 2:26 pm

கம்பஹா அத்தனகல ஓயாவின் அஸ்கிரிய பிரதேசத்தில் மீன்கள் உயிரிழந்தமையை கண்டறிவதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் டி.டபிள்யூ பிரதாபசிங்க தெரிவிக்கின்றார்.

அத்தனகலு ஓயாவின் நீர் மாதிரி குறித்த குழுவிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மீண்டும் அறிவிக்கப்படும் வரை அத்தனகலு ஓயாவை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக கம்பஹா பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று காலை முதல் அத்தனகலு ஓயாவின் அஸ்கரிய பிரதேசத்தில் மீன்கள் உயிரிழந்ததுடன், நீரின் நிறமும் மாற்றமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்