அஞ்சான் படத்தில் கரீனா கபூர்!

அஞ்சான் படத்தில் கரீனா கபூர்!

அஞ்சான் படத்தில் கரீனா கபூர்!

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2014 | 4:50 pm

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கிவரும் படம் ‘அஞ்சான்’.

இப்படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இப்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகை இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அது வேறு யாருமல்ல கரீனா கபூர் தானாம்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் கரீனா கபூர்.

தீபிகா படுகோன், கரீனா கபூர் என அடுத்தடுத்து இந்தி நடிகைகள் தமிழில் நடிப்பது தொடர்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்