100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ்வுட் (Rosewood) மீட்பு (Video)

100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ்வுட் (Rosewood) மீட்பு (Video)

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 2:22 pm

சட்டவிரோதமாக இலங்கையினூடாக வெளிநாட்டிற்கு கடத்த முற்பட்ட 100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ்வுட் (Rosewood) எனப்படும் தாவர வகை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த தாவர வகை இருந்த 28 கொள்கலன்களை கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கிழக்கு ஆபிரிக்க நாடொன்றிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தாவர வகை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்