ஸ்ரீலங்கா விற்பனை ஆய்வுப் பணியகத்திடம் 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளது  சிலோன் நியூஸ்பேப்பர்ஸ்

ஸ்ரீலங்கா விற்பனை ஆய்வுப் பணியகத்திடம் 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளது சிலோன் நியூஸ்பேப்பர்ஸ்

ஸ்ரீலங்கா விற்பனை ஆய்வுப் பணியகத்திடம் 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளது சிலோன் நியூஸ்பேப்பர்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 8:49 pm

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் தனியார் நிறுவனம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி ஸ்ரீலங்கா விற்பனை ஆய்வு பணியகத்திற்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

தமது நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்காக சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசம் ஊடாக சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் தனியார் நிறுவனம் இந்த அறிவித்தலை அனுப்பிவைத்துள்ளது.

ஸ்ரீலங்கா விற்பனை ஆய்வுப் பணியகம், 2012 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை வெளியிடுவதை தன்னிச்சையாகவே நிறுத்தியுள்ளது.

வாராந்தம் இரண்டு செய்திப் பத்திரிகைகளை சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் தனியார் நிறுவனம் விநியோகித்து வருவதுடன், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வர்த்தக விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம் பத்திரிகை வாசகர்கள் தொடர்பிலான மதிப்பீட்டு புள்ளிவிபரங்களில் நான்கு செய்திப் பத்திரிகைகள் குறித்து கவனயீனமாக செயற்பட்டுள்ளதாக சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரசுரிக்கப்படாத செய்திகளுக்கும் வாசகர் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்