விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அ​மைப்புக்களுக்குத் தடை

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அ​மைப்புக்களுக்குத் தடை

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அ​மைப்புக்களுக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 8:41 am

ஐ.நா பாதுகாப்பு பேரவை பிரகடனத்திற்கு அமைய வெளிநாடுகளில் உள்ள 16 அமைப்புக்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் 1373ஆம் இலக்க பிரகடனத்திற்கு அமைய, 16 அமைப்புக்களுக்கு தடை விதிக்க வெளிவிவகார அமைச்சு இன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய:-
[quote]தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் 15 அமைப்புக்களும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக பெயரிடப்படுகின்றன. தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, பிரித்தானிய தமிழர் மன்றம், உலகத் தமிழர் இயக்கம் ஆகிவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பிரதான அமைப்பும் இதில் உள்ளடங்குவதாக அறியக்கிடைத்துள்ளது. இதில் அனேகமான அமைப்புக்கள் ஒருசிலரை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு அமைய இந்த அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் அதன் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதும் சட்டவிரோதமானது என்பதை தெரிவிக்க முடியும். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்