ரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ

ரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ

ரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 11:19 am

ரஷ்யாவுடனான இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து விதமான உறவுகளையும் முறித்துக் கொள்வதாக நேட்டோ அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் க்ரைமியாவை இணைத்துக் கொண்டமையானது ஐரோப்பிய பாதுகாப்புக்கான மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதெனவும் நேட்டோவின் பொதுச் செயலாளர் அண்டர்ஸ் போக் தெரிவித்துள்ளார்.

28 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ மாநாடு பிரஸ்ஸல்சில் நடைபெற்றது.

இதன்போது க்ரைமியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்தமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடனான இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய சிவில் நடவடிக்ககைகளை நிறுத்திக் கொள்வதற்கு நேட்டோ இணங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்