ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்; நாயகி அனுஷ்கா

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்; நாயகி அனுஷ்கா

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்; நாயகி அனுஷ்கா

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 2:35 pm

‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு திகதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினை யார் இயக்கவிருக்கிறார், நாயகிகள் யார் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான ‘சாருலதா’ படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20ஆம் திகதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது.

படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு. அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அனுஷ்கா பச்சைக்கொடி காட்டினாலும், சோனாக்‌ஷி சின்ஹா தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்