மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 9:18 am

மாலை 06 மணித் தொடக்கம் 09 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான செனுஜித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் நிலவும் மழையற்ற வானிலையே நீர்த் தேக்கங்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமைக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக நாளொன்று 15 தொடக்கம் 20 வீதமான நீர்மின் உற்பத்தியே மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 80 வீதமான மின் உற்பத்தியானது அனல் மின் உற்பத்தி நிலையங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனல்மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செனுஜித் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் செனுஜித் தசநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்