முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்தால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்!

முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்தால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்!

முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்தால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்!

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 5:27 pm

எதிர்வரும் காலங்களில் முகம் முற்றாக மறையும் வகையில் தலைக்கவசம் அணிந்துள்ளவர்களை கடும் சோதனைக்குட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் அணிந்து கொள்ளையிடும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகளவில் பதிவாகியமையினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

முகம் முற்றாக மறையும் வகையில் தலைக்கவசம் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எமது நாட்டின் சட்டத்திற்கு அமைய இவ்வாறு தலைக் கவசங்களை அணிய முடியாது எனவும், முகம் முற்றாக மறையும் வகையில் தலைக்கவசம் அணிபவர்கள் அடிக்கடி சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இது தொடர்பான சோதனைகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தங்காபரண கடடைகளின் உரிமையாளர்கள் இது தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்