மக்களவைத் தேர்தல் 2014; பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுளின் வருமானம் 500 கோடி?

மக்களவைத் தேர்தல் 2014; பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுளின் வருமானம் 500 கோடி?

மக்களவைத் தேர்தல் 2014; பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுளின் வருமானம் 500 கோடி?

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 9:36 am

இந்திய மக்களவைத் தேர்தல் காரணமாக கூகுள் இணையத்தளம், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு 500 கோடி (இந்திய ரூபாய்) வருமானம் கிடைக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் 7ஆம் திகதி முதல் மே 12 வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக 500 கோடி (இந்திய ரூபாய்) வரை செலவு செய்யலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

2014 இந்திய மக்களவை தேர்தலில் சுமார் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் மாத்திரம் 10 கோடி. 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்றால் அது 20 கோடியை தாண்டிவிடும்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள். தகவல்களை இணையதளத்தில் பறிமாறி கொள்பவர்கள். இந்த இளைஞர் பட்டாளத்தை அரசியல் கட்சிகளும் தற்போது அதிக அளவில் குறிவைக்க தொடங்கியுள்ளன.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இத்தகைய சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதற்காக அரசியல் கட்சிகள் பல நூறு கோடிகளை செலவு செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்