மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி

மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி

மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 5:44 pm

இலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தலில் சகலதுறை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனையாகத் திகழ்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிருக்கான இருபதுக்கு20 புதிய நிரல்படுத்தலை இன்று வெளியிட்டது.

இதில் முதல் தடவையாக சகலதுறை பட்டியலும் இம்முறை உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவருக்கு 305 புள்ளிகள் கிடைத்துள்ளன.

பந்துவீச்சு பட்டியலில் ஒன்பதாம் இடத்திலுள்ள சஷிகலா சிறிவர்தன துடுப்பாட்டப் பட்டியலில் 15 ஆம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்