பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 2:10 pm

இரண்டு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளான அங்குலானை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்யக்கோரி பிரதிவாதிகளினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

ஷிராணி திலகவர்தண, சந்ரா ஏக்கநாயக்க, சத்யா ஹெட்டிகே, பிரியஷாந் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

நிமேஷ் தரங்க பெர்னாண்டோ மற்றும் தனுஷ்க உதயகாந்த அபொன்சு ஆகிய இரு இளைஞர்கள் மீது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அங்குலானை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை, கடத்தல் மற்றும் கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

அங்குலானை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, அந்த பொலிஸ் நிலையத்தின் சார்ஜன், கான்ஸ்டபிள் மற்றும் கிராம பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்