புத்தளம் – கல்பிட்டி, புத்தளம் – சிலாபம் தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

புத்தளம் – கல்பிட்டி, புத்தளம் – சிலாபம் தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

புத்தளம் – கல்பிட்டி, புத்தளம் – சிலாபம் தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 2:15 pm

புத்தளம் – கல்பிட்டி  மற்றும் புத்தளம் – சிலாபம் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் – சிலாபம் மார்க்கத்தினூடாக பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றின் சாரதியிடம் போக்குவரத்திற்கான அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவித்து குறித்த பஸ்ஸின் போக்குவரத்திற்கு அதிகாரிகள் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

வடமேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்தப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து தடைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கிலேயே புத்தளம் – கல்பிட்டி  மற்றும் புத்தளம் – சிலாபம் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் ஊழியர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் சரத் குமார ரனதுங்க நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்