‘நீ எங்கே என் அன்பே’ – சர்ச்சையை ஏற்படுத்திய நயன்தாராவின் கர்ப்பம்

‘நீ எங்கே என் அன்பே’ – சர்ச்சையை ஏற்படுத்திய நயன்தாராவின் கர்ப்பம்

‘நீ எங்கே என் அன்பே’ – சர்ச்சையை ஏற்படுத்திய நயன்தாராவின் கர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 12:34 pm

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கஹானி’ திடைப்படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் தயாராகி வருகின்றது.

இரு மொழிகளிலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தை நயன்தாரா ஏற்று நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

நயன்தாராவுக்கு தமிழ், மற்றும் தெலுங்கில் வரவேற்பு உள்ளதால் இப்படத்தில் நடிப்பதற்கு அவர் சந்தர்ப்பத்தினை வழங்கினார்.

எனினும் இந்த படத்தின் கதையை மாற்றும்படி இயக்குனரை நயன்தாரா நிர்ப்பந்தித்துள்ளார்.

இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்த போதிலும் தமிழ், தெலுங்கில் கர்ப்பிணியாக தான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா வலியுறுத்தியதால் இயக்குனர் கதாப்பாத்திரத்தினை மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியில் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது கர்ப்பிணியான பெண் தனது கணவனை தேடும் காட்சிகள் என குறிப்பிட்ட இயக்குனர், அந்த வேடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க நயான்தாரா மறுத்ததாக கூறியுள்ளார்.

இதேவேளை படப்பிடிப்புக்கும் நயன்தாரா தினமும் தாமதமாகவே வந்ததாக படக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இயக்குனர் கோபமடைந்ததாகவும் இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிரமங்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்