சுன்னாகத்தில் வாள்வெட்டு தாக்குதல்; மூவர் படுகாயம்

சுன்னாகத்தில் வாள்வெட்டு தாக்குதல்; மூவர் படுகாயம்

சுன்னாகத்தில் வாள்வெட்டு தாக்குதல்; மூவர் படுகாயம்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 11:38 am

யாழ்.சுன்னாகம் மதவடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்து தெல்லிப்பலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகறாறு காரணமாக நேற்று பிற்பகல் இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்