சிலியில் 8.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

சிலியில் 8.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

சிலியில் 8.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 7:34 am

சிலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலியின் இகுய் பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலேயே இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து  45 நிமிடங்களில் சிலியின் வட பகுதியில் 6.3 அடிக்கு கடலலை உயர்ந்துள்ளதாக ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அமெரிக்க பசுபிக் கடற்பிராந்தின் தென் மற்றும் மத்திய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெரு, ஈக்குவடோர், கொலம்பியா, பனாமா, நிக்காரகுவா மற்றும் கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பெருவின் தென் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு சிலியில் உணரப்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வினால் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்