சிலியில் அவசரநிலை பிரகடனம்; பேரழிவு பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன (சிசிடிவி வீடியோ)

சிலியில் அவசரநிலை பிரகடனம்; பேரழிவு பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன (சிசிடிவி வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 4:32 pm

சிலியில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு வட பிராந்தியங்கள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடகிழக்கே சுரங்கப் பகுதிகள் நிறைந்த இக்கீக்கே பிராந்தியத்தில் உள்நாட்டு  நேரப்படி இரவு 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் 2.1 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

அதிபர் மிச்சேல் பாச்சலெட் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகப் படைகளையும் அவர் அனுப்பிவைத்துள்ளார்.

தெற்குப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்றாலும், வட பிராந்தியங்களில் தொடர்ந்தும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்