பாடசாலை செல்ல ஆசையாக உள்ளது – அசாத் சாலி

பாடசாலை செல்ல ஆசையாக உள்ளது – அசாத் சாலி

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 7:55 pm

மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு சிவப்பு சமிக்ஞை ஒன்றை காண்பித்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“ஐ.நாவின் பிரேரணையுடன் மக்கள் இருக்கிறார்கள் என்பதையா இந்தத் தேர்தல் காண்பித்திருக்கின்றது? புதிய தர்க்கம் ஒன்று இருக்கின்றது. 23 பேர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். 12 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். 12 பேர் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர். எதிர்த்து வாக்களித்தவர்களையும் வாக்களிக்காமல் இருந்தவர்களையும் ஒன்று சேர்த்தால் 24 பேர் இருப்பதாகவும், அதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த புதிய கணக்கு முறை எவ்வாறு என்று ஜீ. எல் பீரிஸிடம் கேட்டுக்கொண்டு எனக்கு பாடசாலை செல்ல ஆசையாக உள்ளது. அச்சுறுத்தல்களுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாம் தொடர்ந்தும் கூறி வந்தோம். அதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்