இங்கிலாந்து சிறையில்  27 வயது ‘தாத்தா’

இங்கிலாந்து சிறையில் 27 வயது ‘தாத்தா’

இங்கிலாந்து சிறையில் 27 வயது ‘தாத்தா’

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 3:14 pm

தற்போது சிறையில் உள்ள 27 வயது வாலிபர் தான் இங்கிலாந்திலேயே இளம் தாத்தா என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்தைத் தடுக்க முற்பட்ட போது எதிர்பாராமல் நடந்த கொலைக்காக இங்கிலாந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் 27 வயது இளைஞர் ஒருவர்.
14 வயதில் தந்தையான இவருக்கு, தற்போது 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
அந்த சிறுமி தற்பொழுது 5 மாத கர்ப்பிணியாக உள்ளாராம்.
சிறையில் உள்ள அச்சிறுமியின் தந்தையோ தனது மகளின் கர்ப்பத்தைக் கலைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், கர்ப்பமாக உள்ள அச்சிறுமிக்கு அவரது நட்பு வட்டாரம் ஆதரவு அளிக்கிறதாம்.
சில சட்ட சிக்கல்களை முன்னிட்டு இருவரது பெயரையும் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளன அந்நாட்டுப் பத்திரிக்கைகள்.
இதற்கு முன்புவரை மிகக் குறைந்த வயதில் தாத்தாவானார் ஷெம் டேவீஸ். தெற்கு வேல்ஸ் நகரின் பிரிட்ஜெண்ட் பகுதியை சேர்ந்த ஷெம், தாத்தாவாகும்போது அவருக்கு வயது 29. தனது 14 ஆவது வயதில் தந்தையான ஷெம், தனது 15 ஆவது வயது மகள் மூலம் 29 வயதில் தாத்தாவானது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்