அத்தனகல ஓயாவில் இறந்து மிதக்கும் மீன்கள் (வீடியோ)

அத்தனகல ஓயாவில் இறந்து மிதக்கும் மீன்கள் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2014 | 9:25 pm

கம்பஹா – அத்தனகல ஓயாவில் அஸ்கிரியவை அண்மித்த பகுதியொன்றில் பெருமளவிலான மீன்கள் இறந்து காணப்பட்டன.

இன்று காலை முதல் இந்த நிலைமையை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், காலை முதல் அத்தனகல ஓயா நீரின் நிறத்தில் மாற்றங்கள் தென்பட்டதாகவும் பின்னர் பெருமளவிலான மீன்கள் இறந்து மிதந்ததாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சிறிய வகையான மீன்கள் மாத்திரமன்றி பெரிய மீன்களும் இறந்து காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

 

மீன்கள் இறப்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளாமல் அதனை உட்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்