அஜித்திற்கு வில்லன்களாகும் அருண்விஜய், அரவிந் சாமி

அஜித்திற்கு வில்லன்களாகும் அருண்விஜய், அரவிந் சாமி

அஜித்திற்கு வில்லன்களாகும் அருண்விஜய், அரவிந் சாமி

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 11:05 am

அஜித் – கெளதம் மேனன் இணையும் படத்தினைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது. முக்கியமாக இசையமைப்பாளர் மற்றும் வில்லனைப் பற்றிய செய்திகள் இதில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றன.

அஜித் – கெளதம் மேனன் – அனுஷ்கா இணையும் படத்தினை ஏ.என்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

அஜித் – கெளதம் மேனன் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகிவிட்டது. மேலும், இப்படத்தில் அஜித் நாயகன், வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். என்ற செய்தி தவறானது. அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.

வில்லன்கள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது, இரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறது படக்குழு.

படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

சிம்பு – கெளதம் மேனன் இணைந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டான் மெக்கார்தர் (Dan Macarthur), அஜித் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அஜித் – அனுஷ்கா – அரவிந்த் சாமி – அருண்விஜய் என ஒரு புதிய கூட்டணியுடன் அதிரடியான ஒரு பொலிஸ் அதிரடி கதைக்கு திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்