விஜயின் “கத்தி” திரைப்பட பாடல்கள் ஹிட் ஆகுமா?

விஜயின் “கத்தி” திரைப்பட பாடல்கள் ஹிட் ஆகுமா?

விஜயின் “கத்தி” திரைப்பட பாடல்கள் ஹிட் ஆகுமா?

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 12:38 pm

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிறை தொடர்ந்து இளைய தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’.

கத்தி திரைப்படத்தில் விஜய் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.

சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றிக் கூட்டணியில் புதிதாக அனிருத் இணைந்திருப்பதால் படத்தின் இசை மற்றும் பாடல்கள் தொடர்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த எதிர்ப்பை அனிருத் பூர்த்தி செய்வாரா என்பதுதான் விஜய் ரசிகர்களின் கேள்வி.

கத்தி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் ஆகியன இடம்பெறுகின்றன.

இவை அனைத்தையும் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டாராம்.

வழக்கம்போல் இந்த திரைப்படத்திலும் விஜய் பாடும் பாடல் ஒன்றும் இடம்பெறுகிறதாம்.

படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலை அனிருத்தும், ஆதியும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.

இப்பாடல் இந்த வருடம் சூப்பர் ஹிட் வரிசையில் இடபெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்திலும், ஐதராபாத்திலும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஏனைய பாடல்களை அடுத்தடுத்து படமாக்க இருக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்