ராஜீவ் கொலை வழக்கு: தூக்குத் தண்டனை இரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கு: தூக்குத் தண்டனை இரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கு: தூக்குத் தண்டனை இரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 4:15 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை இரத்துக்கு எதிராக மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இரத்து செய்திருந்தது.

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.​

இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான குழு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்