யுக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

யுக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

யுக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 2:21 pm

நேட்டோ நாடுகளின் தலைவர்கள் யுக்ரைனுக்கு ஆதரவளிக்கவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு உதவியளிக்கும் விதமாகவும், பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளனர்.

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தப் பேச்சுவார்த்தை பெல்ஜியத்தின் ப்ரசெஸ்சில் இடம்பெறவுள்ளது

முதன்முறையாக நேட்டோவின் 28 உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பிராந்திய நாடுகளின் வான்பரப்பில் நேட்டோ மேற்கொள்ளும் வருடாந்த வான் பயிற்சிகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா யுக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைகொண்டிருந்த ஒரு பகுதியினரை நேற்று மீள அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ரஷ்யா அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளை மையப்படுத்தி தடைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்