முள்ளியவளை சுற்றிவளைப்பில் மூவர் கைது

முள்ளியவளை சுற்றிவளைப்பில் மூவர் கைது

முள்ளியவளை சுற்றிவளைப்பில் மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 6:09 pm

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மூவரே நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை பகுதியில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்