மார்க் சக்கர்பெர்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மார்க் சக்கர்பெர்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மார்க் சக்கர்பெர்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 3:36 pm

கடந்த காலங்களில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சம்பளம் என்று பார்த்தால், சுமார் 769,000 டொலர் ஆகும்.

ஆனால், 2013ஆம் நிதியாண்டு துவக்கம் முதல் இவரின் சம்பளத்தை 1 டொலராகக் குறைத்துக் கொண்டுள்ளார்.

இந்த செய்தி உலகம் முழுவதும் மிகவும் வேகமாகப் பரவிவருகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 27 பில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகளை இவர் தன்னகத்தில் வைத்துள்ளார் என அமெரிக்க சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செர்லின் சன்டுபெர்க் வருடத்திற்கு 16.1 பில்லியன் டொலர் சம்பளமாகப் பெறுகிறார்,

அதேபோல், தலைமை நிதியியல் அதிகாரி டேவிட் எம்பர்மேன் வருடத்திற்கு 10.5 மில்லியன் டொலர் அளவு சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரைப் போலவே சக்கர்பெர்க்கும் தற்போது தனது சம்பளத்தை 1 டொலராகக் குறைத்துக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்