மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை ‘ஆல் ரைட், குட்நைட்’ இல்லையாம்!

மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை ‘ஆல் ரைட், குட்நைட்’ இல்லையாம்!

மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை ‘ஆல் ரைட், குட்நைட்’ இல்லையாம்!

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 2:50 pm

மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு விமானி கடைசியாகக் கூறிய வார்த்தை என்று புதிதாக ஒன்றை மலேசியா தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 இரண்டு வார தேடலுக்குப் பிறகு தெற்கு இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மலேசிய அரசு புதிய தகவலொன்றைத் தெரிவித்துள்ளது.

மலேசிய விமானத்தின் துணை விமானி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைக் கடைசி முறையாகத் தொடர்பு கொண்டபோது “ஆல் ரைட், குட்நைட்” என்ற வார்த்தைகளைத் தெரிவித்ததாக முன்பு கூறப்பட்டது.

மலேசிய விமானத்தின் விமானி அறையில் இருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு கடைசியாக தெரிவிக்கப்பட்ட வார்த்தை “குட்நைட் மலேசியன் 370” என தற்போது மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமானிகள் அறையில் கடைசியாகப் பதிவான உரையாடல்களை பயணிகளின் உறவினர்களுக்குத் தெரிவிக்குமாறு மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“குட்நைட் மலேசியன் 370” என்று கூறியது மலேசிய விமானத்தின் கேப்டனா, துணை விமானியா என்று விசாரணை நடந்து வருகிறதாம்.

முன்னதாக “ஆல்ரைட் குட்நைட்” என்ற வார்த்தைகளை துணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது தான் தெரிவித்ததாக மலேசியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்