மலேசியாவில் விளையாட்டுத் துறையில் திறமையை வெளிப்படுத்தும் இலங்கையர் (Exclusive Interview)

மலேசியாவில் விளையாட்டுத் துறையில் திறமையை வெளிப்படுத்தும் இலங்கையர் (Exclusive Interview)

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 12:20 pm

உயர்கல்வி மற்றும் தொழிலுக்காக அன்னிய மண்ணில் தஞ்சம் புகும் இலங்கையர்களில் ஒரு சிலர் விளையாட்டுத்துறையில் தமக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி சாதித்து வருகின்றமை நாம் அறிந்த விடயமாகும்.

அந்த வகையில் மலேஷியாவில் மத்திய தூர ஒட்டத்தில் சாதித்து வரும் ஒருவராக  இலங்கையின் அசந்த டேவிட் கிறிஸ்டி விளங்குகின்றார்.

marathan 01

மலேசியாவில் தொழில் புரியும் இவர் பாடசாலை காலம் முதல் தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

அக்குரனை உடுவில ரத்னபால மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் 800m,1500m,5000m, போன்ற போட்டிகளில் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

marathan 02

தொழிலுக்காக 2008 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு சென்ற இவர். விளையாட்டில் உள்ள ஆர்வத்தினால் அங்கு சில போட்டிகளில் பங்குபற்றி உள்ளார்.

இதுவரையில் அழைப்பு, பகிரங்க, நலன்புரி என பல போட்டிகளில் பங்கு கொண்டு தங்கம்,வௌ்ளி,வெண்கலம் போன்ற பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளார்.

marathan 04

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஓடும் இவர் கென்னியா, எதியோப்பியா போன்ற நாட்டு வீரர்களுடன் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

marathan 03

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே இவரின் ஒரே எதிர்பார்ப்பு.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்