பேரினவாதிகள் பட்டியலில் ஆளுநர்; சிவனேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

பேரினவாதிகள் பட்டியலில் ஆளுநர்; சிவனேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 6:45 pm

கொக்கட்டிச்சோலை – மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்கான புதிய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

புறநெகும திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடி ரூபா செலவில் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஜீப் ஏ.மஜீத் தலைமையில் இந்தக் கட்டடம்  திறந்து வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிவனேசத்துரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் ஏற்கனவே சொன்னது போல  இந்த நாட்டில் இருக்கும் பேரினவாதிகள் பட்டியலில் பார்த்தால் எங்களுடைய மாகாணத்தில் இருக்கின்ற  கௌரவ ஆளுநரும் அந்த இடத்தைப் பிடிப்பார் என நம்புகின்றேன். அவர் எடுத்திருக்கும் தீர்மானம் மனசாட்சிப்படி பிழையானது, மரபுப்படி பிழையானது, இந்த மாகாணத்தில் இருக்கின்ற மக்களின் மனங்களைக் குளப்பும் முடிவு.  இந்த மாகாணத்தின் மக்களுடைய  நலன்களை, இந்த மக்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமாக ஆழ்ந்து சிந்திக்க முடியாது. ஏனென்றால், அவர் இங்கு பிறக்கவில்லை. பகடைக்காயாக கிழக்கு மாகாண அமைச்சரவையை அவர் பயன்படுத்துகின்றார். அவர்  சிங்கள மக்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதி என்று தம்மை காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்.  நாமெல்லாம் கலந்தாலோசித்து ஒரு முடிவொன்று எடுக்காமல் போனால், அடுத்த அரசாங்கம், அரசாங்கத்திற்கு எதிரான அரசாங்கமாக அமையும்,” என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்