பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; பிரதிவாதிகளிடம்  குற்றப்பத்திரிக்கை ஒப்படைப்பு

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; பிரதிவாதிகளிடம் குற்றப்பத்திரிக்கை ஒப்படைப்பு

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; பிரதிவாதிகளிடம் குற்றப்பத்திரிக்கை ஒப்படைப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 7:11 pm

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்பத்திரிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிரதிவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டமை, மனித படுகொலைக்கான முயற்சி மற்றும் அநாவசியமான ஒன்று கூடல் ஆகிய குற்றங்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாக காணப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கான தயார் நிலை குறித்து மேலதிக நீதவான் பிரியந்த லியனகே பிரதிவாதிகளிடம் வினவியுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், சாட்சியம் அளிக்கத் தயார் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்