பாகிஸ்தானை வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி

பாகிஸ்தானை வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி

பாகிஸ்தானை வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 10:42 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் இறுதி அணியைத் தீர்மானிப்பதற்கான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றது..

மீர்பூரில் நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும்
மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

167 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அகமத் ஷேஸாட் மற்றும் கம்ரன்  அக்மல் ஆகியோர் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழக்க ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

மொஹமட் ஹபிஸ் பெற்ற 19 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும் .

பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 82 ஓட்டங்களையே பெற்றது.

பந்துவீச்சில் சமுவல் பத்ரி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 166 ஓட்டங்களை பெற்றது.

டுவைய்ன் பிராவோ 26 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றதுடன், டரன் சமி 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த போட்டியில் 84 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேறியதுடன்  நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்