நடிகை மனோரமாவுக்கு தீவிர சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு தீவிர சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு தீவிர சிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 4:37 pm

நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகை மனோரமாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

55 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையில் பயணித்துவரும் நடிகை மனோரமா (77), ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர், நடிகைகள் பலருடன் நடித்தவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த நடிகை மனோரமா, பின்னர் சில காலம் காரைக்குடியில் வசித்தார்.

மூட்டுவலி பிரச்சினையால் சிரமப்பட்டு வந்த மனோரமாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்