தொடர்ந்தும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் விபூஷிகா; பூஸாவில் ஜெயக்குமாரி

தொடர்ந்தும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் விபூஷிகா; பூஸாவில் ஜெயக்குமாரி

தொடர்ந்தும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் விபூஷிகா; பூஸாவில் ஜெயக்குமாரி

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 8:40 pm

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட 13 வயது சிறுமி பாலேந்திரன் விபூஷிகாவை தொடர்ந்தும் சிறுவர் நன்னடத்தை பிரிவின் பாதுகாப்பில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சிறுமியின் தாயாரான பாலேந்திரன் ஜெயக்குமாரி  கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் சந்தேகநபர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறுமியை பொறுப்பேற்பதற்கு எவரும் முன்வராமையால், சிறுமியை பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த விபூஷிகா நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தொடர்ந்தும் அவரை சிறுவர் நன்னடத்தை பிரிவின் பாதுகாப்பில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்