திலகரத்ன டில்ஷானுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம்

திலகரத்ன டில்ஷானுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம்

திலகரத்ன டில்ஷானுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம்

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 4:43 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திலகரத்ன டில்ஷானுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் விதிமுறையை மீறி செயற்பட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் திலகரத்ன டில்ஷான் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்போது தமக்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தீர்மானம் சரியானதா எனும் பாணியில் டில்ஷான் கள நடுவரிடம் வினவியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் டில்ஷானுக்கு குறித்த போட்டிக் கட்டணத்தில் 20 வீத அபராதம் விதிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்