சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திடம் 1 பில்லியன் நட்ட ஈடு கோரியுள்ளார் கரு ஜயசூரிய

சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திடம் 1 பில்லியன் நட்ட ஈடு கோரியுள்ளார் கரு ஜயசூரிய

சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திடம் 1 பில்லியன் நட்ட ஈடு கோரியுள்ளார் கரு ஜயசூரிய

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 9:16 pm

தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இரண்டு கட்டுரைகளை பிரசுரித்தமைக்காக ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு இரண்டு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மவ்பிம பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு
கட்டுரைகளால் தமது தரப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மல்லவ ஆராய்ச்சி சட்ட நிறுவனத்தின் ஊடாக
அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கை கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையால் தமது தரப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பு 500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கோரிக்கைக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு கட்டுரைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கான நட்ட ஈடாக ஒரு பில்லியன் ரூபாவை கரு ஜயசூரியவிற்கு
வழங்குமாறு 2014 மார்ச் 26 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக் கடிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்ட ஈட்டினை இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதற்கு சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் தனியார் நிறுவனம் தவறினால்,
ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்வதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக  கோரிக்கைக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்