கீரியங்கள்ளியில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கீரியங்கள்ளியில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கீரியங்கள்ளியில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 1:35 pm

புத்தளம் – முந்தல், கீரியங்கள்ளி – ஆண்டிகம பிரதான வீதியிலுள்ள பாலமொன்றினுள் மோட்டார் சைக்கிளொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், சிலாபம் ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பாலத்திற்குள் விழுந்து நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

முந்தல், கீரியங்கள்ளி – ஆண்டிகம பிரதான வீதியின் புனரமைப்பு காரணமாக பாதுகாப்பற்ற வகையில் குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றமையினால், அண்மைகாலமாக பல வீதி விபத்துக்கள் இடம்பெற்று, உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்