கடந்த மூன்று மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 815 முறைப்பாடுகள்

கடந்த மூன்று மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 815 முறைப்பாடுகள்

கடந்த மூன்று மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக 815 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 1:28 pm

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிரான 815 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இவற்றில் பொதுமக்கள் சமர்ப்பித்த 557 முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் டீ.எம்.பீ தென்னக்கோன் தெரிவித்தார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்திய 071 036 10 10 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் முறையிடுவதற்காகவே, இந்தத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த  காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 206 எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் டீ.எம்.பீ தென்னக்கோன் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்