இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கொழும்பில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கொழும்பில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி செயலமர்வு

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கொழும்பில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி செயலமர்வு

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 2:10 pm

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமானது.

ஒன்பது நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கூட்டு இராணுவப் பயிற்சி  செயலமர்வை, அமெரிக்காவின் பசுபிக் வலயத்திற்கான கட்டளைத் தலைமையகம் மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிப்பு.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இந்தப் பயிற்சி  செயலமர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி  செயலமர்வில் முப்படையைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 21 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்களைத் தவிர, அமெரிக்க உத்தியோகத்தர்கள் 21 பேரும், மேலும் 15 நாடுகளைச் சேர்ந்த 26 பேரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்