இலங்கைக்கு எதிரான பிரேரணையை வரவேற்றுள்ளது  Action Against Hunger

இலங்கைக்கு எதிரான பிரேரணையை வரவேற்றுள்ளது Action Against Hunger

இலங்கைக்கு எதிரான பிரேரணையை வரவேற்றுள்ளது Action Against Hunger

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 9:25 pm

மனித உரிமை மீறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக பிரான்ஸின் Action Against Hunger நிறுவனம் தெரிவித்துள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் மூதூரில் தமது தன்னார்வத் தொண்டர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற நிறுவனமான Action Against Hunger  நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதேபோன்று தமது அமைப்பும் அடைந்த வெற்றியென அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரெய்சியை மேற்கோள் காட்டி ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

[quote]நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாக செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதரர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையொன்று கிடைத்துள்ளது. அதன் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்