இந்தியாவில் பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் அறிமுகம்

இந்தியாவில் பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் அறிமுகம்

இந்தியாவில் பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2014 | 3:59 pm

இந்தியாவில் நாணயத் தாள்களை காகிதத்தில் அச்சடிப்பதைத் தவிர்த்து பிளாஸ்டிக் இழைகளில் அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவு செய்திருந்தது.

இந்த பிளாஸ்டிக் நாணயத் தாள்களை இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிடாமல், சோதனை முயற்சியாக சில நகரங்களில் மட்டும் செயற்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 ரூபாய் நாணயத் தாள்களை அச்சடிக்க உள்ளது.

பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் அச்சடிக்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பிளாஸ்டிக் நாணயத் தாள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தன.

இவை தவிர, உலகின் 30 நாடுகள் பிளாஸ்டிக் நாணயத் தாள்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இவற்றைப் பயன்படுத்தும் பெரும்பாலான நாடுகள் குளிர் பிரதேசங்களாகும்.

இந்நிலையில், ஆசியாவின் தட்பவெப்ப நிலைக்கு பிளாஸ்டிக் நாணயத் தாள்கள் தாக்குப்பிடிக்குமா என்பதையும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.

ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய் நாணயத் தாள்களை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒரிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, படிப்படியாக இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய்களை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்