ஹம்பாந்தோட்டையில் டி.வி,உபுலுக்கு முதலிடம்

ஹம்பாந்தோட்டையில் டி.வி,உபுலுக்கு முதலிடம்

ஹம்பாந்தோட்டையில் டி.வி,உபுலுக்கு முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 5:14 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட டி.வி உபுல் 64,995 விருப்பு வாக்குளைப் பெற்று அந்த மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

எம்.கே கசுன் 55,881 விருப்பு வாக்குகளைப் பெற்று இரணடாம் இடத்தை கைப்பற்றியுள்ளதோடு 34,591 விருப்பு வாக்குகளைப் பெற்ற அஜித் ராஜபக்ஸ மூன்றாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

தென் மாகாண சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் ஏ. தென்னகோன் நிலமே 28,825 விருப்பு வாக்குளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி 11,957 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தையும் 6,177 விருப்பு வாக்குகளைப் பெற்ற அதுல வெதகொடஹேவகே இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்