ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 7:56 pm

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைப் பீட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் கடந்த 24 ஆம் திகதி இரவு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மிரிஹான பொலிஸ் நிலையில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபர்களான பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்