வெற்றி நெதர்லாந்து வசம்

வெற்றி நெதர்லாந்து வசம்

வெற்றி நெதர்லாந்து வசம்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 8:40 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

134 ஓட்டங்களை வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஒவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எவ்வாறாயினும், இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்