வாகன விபத்தில் உயிரிழந்த சுமதிபால மானவடுவிற்கு 2391 வாக்குகள் (CCTV Video)

வாகன விபத்தில் உயிரிழந்த சுமதிபால மானவடுவிற்கு 2391 வாக்குகள் (CCTV Video)

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 4:14 pm

மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, தேர்தலுக்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் வாகன விபத்தில் உயிரிழந்த வேட்பாளர் சுமதிபால மானவடுவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் சுமதிபால மானவடு 2391 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பாக, கம்பஹா மாவட்டத்தில் அவர் போட்டியிட்டிருந்தார்.

”சுமதிபால மானவடு அகால மரணத்தை தழுவியிருந்தாலும், மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மரியாதையையே இந்த விருப்பு வாக்குகள் உணர்த்துகின்றன”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்