ரிச்சட் பத்திரண வித்தியாலயத்தில் புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு

ரிச்சட் பத்திரண வித்தியாலயத்தில் புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 8:07 pm

காலி, போத்தல ரிச்சட் பத்திரண வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் புள்ளியிடப்பட்ட வாக்குச்சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட இந்த வாக்குச்சீட்டு பாடசாலை அதிபரின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்