ரங்கனவின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து; அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

ரங்கனவின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து; அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

ரங்கனவின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து; அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 10:07 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 போட்டியின் தீர்மானமிக்க இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

120 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, ஆரம்பம் முதலே இலங்கை அணியின் பந்து வீச்சிக்கு தடுமாறியது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி 60 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் மாத்திரமே 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். நான்கு வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்ததோடு ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தோடு ஆட்டமிழந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 3 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்த 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சச்சித்ர சேனாநாயக்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மஹேல ஜயவர்தன 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜிம்மி நீசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவானார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்