English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Mar, 2014 | 10:24 am
மோசமான ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே ஜனநாயகக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றி தொடர்பில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா நியூஸ்பெஸ்டுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[quote]கட்சியை பதிவு செய்ததன் பின்னர் தேர்தல்களில் களமிறங்கினோம். இதற்கு மக்கள் சிறந்த வகையில் ஆதரவு வழங்கினார்கள் இதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம், அதே போன்று நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். மக்கள் பெரும் துன்னபங்களை அனுபவிக்கும் இந்த நாட்டில் மிகவும் மோசமான ஆட்சியாளர் இருக்கின்ற நிலையில் அந் நிலையில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ஜனநாயகக் கட்சியை ஸ்தாபித்து மக்களுக்காக பங்களிப்புகளைச் செய்தோம்.இந்தப் பயணத்தின் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதே போன்று மேல் மாகாணத்தில் மஹரகமயில் கூட்டத்ததை நடத்த அனுமதி வழங்கவில்லை. ஏனைய கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகேகொடையில் கூட்டத்ததை நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ஏனையோர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் மக்கள் மத்தியில் சென்றபோது எமது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் மக்களுக்காக எமது பங்களிப்புக்களைச் செய்தோம். இதற்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூறுகின்றோம். ஜனநாயகக் கட்சியினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முழு அளவில் செயற்படுவோம். அதே போன்று எமக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சிரச ஊடகத்திற்கு நன்றி கூறுகின்றோம்.[/quote]
07 Feb, 2023 | 05:47 PM
07 Feb, 2023 | 05:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS