முஷாரப்பிற்கு எதிராக இராஜதுரோக குற்றச்சாட்டு

முஷாரப்பிற்கு எதிராக இராஜதுரோக குற்றச்சாட்டு

முஷாரப்பிற்கு எதிராக இராஜதுரோக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 7:43 pm

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் இராஜதுரோக குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ள முதலாவது இராணுவ சிரேஷ்ட அதிகாரியாக முஷாரப் பதிவாகியுள்ளார்.

சட்டவிரோதமாக அரசியலமைப்பை இடைநிறுத்தியமை ஆட்சிக்காலத்தில் அவரச நிலைமையை பிரகடனப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள பர்வேஸ் முஷாரப் தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டதென கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் பர்வேஸ் முஷாரப் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் மரண தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக செயற்பட்ட முஷாரப் நீண்டகாலம் ஆட்சி நடத்திய ஒருவராகவும் பதிவாகியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு நாட்டில் இருந்து வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு திரும்பியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்