மாயமான விமானத்தை தேடுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை – டொனி அபொட்

மாயமான விமானத்தை தேடுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை – டொனி அபொட்

மாயமான விமானத்தை தேடுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை – டொனி அபொட்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 6:15 pm

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கு மீட்பு பணியாளர்களுக்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை என அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள பேர்த்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் விமானத்தைப் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்களை கண்டறியும் நடவடிக்கையில் 10 விமானங்கள் மற்றும் 10 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

239 பேருடன் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போன மலேஷிய விமானம் தொடர்பான நம்பகமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில், அது தொடர்பான மர்மம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்